இலங்கை கடலோர படையினருக்கு இரண்டு படகுகளை வழங்க இந்திய மேற்கொண்டுள்ள தீர்மானத்தை கைவிடுமாறு வலியுறுத்தி சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் முன்னிலையான இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விவகார செயலாளர் மாயன் ஜோசி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையேயான எழுதப்படாத உடன்படிக்கையா, மன்னார் கடற்படுக்கையை எண்ணை அகழ்விற்கக சூனியப் பிரதேசமாக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற கொள்கையை பின்பற்றுவதாகவும், அவர்கள் எந்த தருணத்திலும் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதில்லை என்று உறுதி வழங்கி இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ள படகுகள் யுத்தக் கப்பல்கள் இல்லை என்றும், அவை சாதாரண கண்காணிப்பு படகுகள் என்றும், இதனால் இந்திய மீனவர்களுக்கு எந்த வகையான பாதிப்புகளும் ஏற்படாது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய அதிகாரவர்க்கம் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள அதிகாரவர்க்கங்கள் இலங்கை அரசின் வகீல்கள் போலச் செயற்படுகின்றன. இலங்கை அரசாங்கம் மீனவர்களைக் கொலைசெய்யவில்லை என இந்திய அரசு கூறுவது இதற்குச் சிறந்த உதாரணம்.