அமைச்சர்கள் 49 பேரும் இரு குழுக்களாகப் பிரிந்து சீனாவுக்கும், தாய்லாந்துக்கும் பயணம் செய்து அங்கு 14 தினங்கள் கழிப்பதற்கே இவ்வளவு பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது. முதல் குழு கடந்த மார்ச் மாதம் இந் நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதோடு, அடுத்த குழு கடந்த மே மாதம் முப்பதாம் திகதி பயணப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களுக்காக இவ்வாறு மாகாண சபை பணமானது செலவிடப்பட்ட போதும், பண உதவி எதுவும் செய்யாத காரணத்தால் கடந்த 5 வருடங்களில் 121 பாடசாலைகள் இந்த அமைச்சர்களது மாகாணத்தில் மூடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வைத்தியசாலைகளில் பாரிய மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதோடு, தற்பொழுது இருக்கும் பாடசாலைகளில் ஆசிரியர் தட்டுப்பாடுகளும் நிலவுகிறது.