Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை : அடக்குமுறையின் பரிசோதனைக் கூடம்?

தேசிய காவல்துறை அகடமி ஒன்றை அமைப்பது தொடர்பான உத்தேச சட்டமூல வரைவுத் திட்டத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காத்திரமான காவல்துறை சேவையொன்று அவசியமானதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறை அகடமி ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரமளித்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்டம், குற்றவியல் சட்டம், விசாரணைகள், மக்கள் தொடர்பு, இரசாயன பகுப்பாய்வு, முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை விமானநிலையத்தில் கடவுச்சீட்டுக்களின் உண்மைத் தன்மையை ஆராயும் தனிப்பிரிவு அமைக்கப்ப்ட உள்ளது.
இலங்கை இராணுவம் எவ்வாறு அழிப்பது என்பது குறித்து பலநாடுகளுக்குப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. ஆக, இலங்கை என்பது உலக அடக்குமுறை இயந்திரத்தின் பரிசோதனைக் கூடம் போன்று செயற்படுகிறதா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுகிறது.

Exit mobile version