Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அகதிகளின் சொத்து விபரங்கள் : தமிழ் நாட்டில் சேகரிப்பு

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் சொத்து விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்துள்ளன.  இதன் அடிப்படையில் தமிழகத்தின் சேலம் அகதி முகாம்களில் வசிக்கும் அகதிகளின் சொத்து விபரங்கள் தமிழக அதிகாரிகளினால் திரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசாங்கம் வீடு உட்பட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. இந்தநிலையில், அவர்கள் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்திருப்பதாக வெளியான தகவல்களை அடுத்தே இந்தத் தகவல் திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சேலம் மாவட்ட கலெக்டர், மதிவாணன் தெரிவித்துள்ளார்.

சேலம்  மாவட்டத்தின்,   ஸ்ரீதர்கோயில்,   அம்மாம்பாளையம்,    தாண்டவாரயப்புரம்,   நாகியம்பட்டி,   தம்மாம்பட்டி, சென்தாரப்பட்டி,   குறுக்குப்பட்டி,  பவளத்தானூர், மற்றும் அதிகாட்டனூர் ஆகிய முகாம்களில் உள்ள முகாம்களின் சுமார் மூவாயிரத்து 431 பேரிடம் இந்த சொத்து விபரங்கள் திரட்டப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 130 அகதிமுகாம்களில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். மண்டபம், இராமநாதபுரம், திருச்சி மற்றும் கொட்டாப்பட்டு ஆகிய இடங்களிலேயே அகதி முகாம்கள் அமைந்துள்ளன

Exit mobile version