Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையை வலம் வரும் சீன ரஷ்ய இந்தியக் கூட்டணி

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் ஒப்பந்த
முன்னெடுப்புக்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம்
கிடையாது என்று சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வெளிவிவகார
அமைச்சர் வி. லவ் ரொவ் தெவித்துள்ளார்.

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எழுப்பப்படும் யுத்தக்
குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் ரஷ்ய அரசாங்கம் சிறீலங்காவை காப்பாற்றுமா?
என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத்
தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கில் மோதல்களை ·முடிவிற்கு கொண்டு வருவதற்காக சிறீலங்கா அரசாங்கம்
மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளித்தோம். பயங்கரவாதத்திற்கு எதிரான
யுத்தத்தில் இதுவொரு சமுக்கியமான உள்ளீடாகும்.

நாட்டின் வடக்குப் பகுதியின் சூழ்நிலையை மிகவும் விரைவாக இயல்பு நிலைக்கு
கொண்டு வருவதற்கு நாம் வலுவாக ஆதரவளிக்கின்றோம். ரஷ்யா உட்பட
வெளிநாடுகளால் வழங்கப்படும் உதவிகள் சிறீலங்கா அரசாங்கத்தின்
·முயற்சிகளுக்கு பக்கபலமாக அமையும் என நம்புகின்றோம்.

இந்த ·முயற்சிகளை நாம் வலுவாக ஆதரிக்கின்றோம். இவை நடை·முறைச் சாத்தியமான பெறுபேறுகளை மிக விரைவாக கொண்டு வரும்.
இதே வேளை சீன அரசு பில்லியன் ரூபாய்களை இலங்க வடக்கின் வசந்தம் திட்டத்திற்கு வழங்கியுள்ளது.

தவிர இந்திய ரஷ்ய   சீன வெளிவிகார அமைச்சர்கள் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெற்காசியாவில்  பயங்கரவாதத்திற்கு எதிராக இணைநடவடிக்கைகளை  மேற்கொள்வதாகத்  தெரிவித்துள்ளனர்.

Exit mobile version