Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையை வட்டமிடும் அமரிக்க வல்லூறுகள்

vallooduஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உக்தியில் இலங்கை அண்மையில் உள்ளடக்கப்பட்ட நாடுகளில் ஒன்று என அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார். அதே வேளை அமெரிக்க அரசின் நேரடித் தலையீட்டை அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவரான ஆர்மிதாஜ் உம் உறுதிப்படுத்தியுள்ளார். வால் ஸ்ரிட் ஜேர்ணல் என்ற சஞ்சிகையில் ஆர்மிதாஸ் எழுதியுள்ள கட்டுரை இலங்கை அரசுடன் அமெரிக்காவின் நேரடி ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளார்.

உலகில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதுவதாகவும் இலங்கைக்கு தாராளமாக உதவிகள் வழங்கப்படும் என்றும் சூசான் ரைஸ் மேலும் தெரிவித்துள்ளார். இதுவரை அமெரிக்கா தலையிட்ட நாடுகள் அனைத்தும் இரத்தமும் சதையுமாகவே காணப்படுகின்றன.

சிவில் சமூகம் மற்றும் நல்லாட்சி என்ற அமெரிக்க அரசின் கருத்தை இலங்கை முழுவதும் விதைக்கும் அமெரிக்க அரசு அதன் மறுபுறத்தில் இலங்கையை இராணுவ மயப்படுத்தவும் சூறையாடவும் திட்டமிடுவதை ஆர்மிதாஸ் மற்றும் ரைஸ் போன்றவர்களின் கருத்துக்கள் ஊடாகக் காணலாம்.

இதுவரை இலங்கை அரசின் இனப்படுகொலைக்கும் சர்வாதிகாரத்திற்கும் ஆதரவளித்தவர்கள் இன்று நல்லாட்சி தொடர்பாகப் பேசுவதைக் காணலாம். அமெரிக்க அரசின் நிதியில் நடத்தப்படும் தன்னார்வ நிறுவனங்கள் ஒரு புறத்திலும், பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மறுபுறத்தில் இலங்கை முழுமையையும் சுரண்டிக்கொள்ள தெற்காசியாவின் இராணுவ முகாமாக இலங்கையை மாற்ற அமெரிக்கா திட்டமிடுகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் ஒட்டுக்குழுக்களாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் செயற்படுகின்றன.

அமெரிக்க அரசு இலங்கையை மையமாக வைத்து மற்றொரு அழிவைத் தெற்காசியாவில் திட்டமிடும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது.

Exit mobile version