Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையைப் போன்றே இந்தியாவிடமும் சுயாதீன விசாரணை நடத்துமாறு பிரித்தானியா கோரியது

Sikhபோர் குற்றங்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளிவிப்படையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையிடம், பிரித்தானியா கோரியிருந்தாகவும் இந்த கோரிக்கை இந்தியாவுக்கும் பொருந்தும் என சீக்கிய அமைப்பான தல் கல்சா தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவரான பாய் ஹரிசரண்ஜித் சிங் தானி இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட கமரூன், உரிமை மீறல்கள் விசாரணை நடத்துமாறு முறைசார விதத்தில் இலங்கை ஜனாதிபதியிடம் கூறியதாக நம்பப்படுகிறது. எனினும் கமரூன் அவர் தெரிவித்த விடயம் தொடர்பில் எப்படியான நடவடிக்கை எடுக்க போகிறார் என்பது குறித்து சீக்கியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கையை போன்று 1984 ஆம் ஆண்டு இந்தியாவில் சீக்கியர்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் வெளிப்படையான சுதந்திரமான விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அது தோல்வியடைந்தது.

ஜனநாயகத்தின் தொட்டிலான பிரித்தானியா இந்தியாவிடம் தோல்வியடைந்து போல் இந்த விடயத்தில் இலங்கையிடம் தோல்விடைந்து விடக் கூடாது.

வியாபாரிகள் தமக்கிடையேயான ஒப்பந்தங்களுக்காக மோதிக்கொள்வதையும் பின்னர் இணைந்து கொள்வதையும் மனிதாபிமானம் என்று தவறாகப் புரிந்துகொண்டால் அது முழு மக்களைது அழிவிற்கு இட்டுச்செல்லும்.

விடுதலைப்புலிகளுடனான இரத்தம் தோய்ந்த மோதலில் அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு பிரிட்டன் விடுத்த கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி குப்பைக் கூடையில் எறிந்து விடக் கூடும்.

1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக உரிய முனைப்புகளை மேற்கொள்ளாது கடந்த 29 ஆண்டுகளாக ஆட்சிக்கு வந்த பிரித்தானிய அரசாங்கங்கள் அமைதியாக இருந்து வருவது துரஷ்டவசமானது.

ஆயிரக்கணக்கான சீக்கிய ஆண்களும், பெண்களும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதுடன் சீக்கிய வழிப்பாட்டுத் தலங்கள் எரித்து அழிக்கப்பட்டன.

இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டு அரசியல் மற்றும் சட்டத்தின் ஊடாக நீதியை பெற முடியவில்லை. இதனால் சீக்கியர்கள் 1984 ஆம் ஆண்டு படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின் விசாரணைகளை கோரி வருகின்றனர் என்றார்.
இங்கு கூறப்படுவது போல் யாரும் யாரிடமிம் தோல்வியடையவில்லை. மக்களே ஒவ்வொரு தடவையும் தோல்வியடைந்துள்ளார்கள். அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு மக்கள் மத்தியிலிருந்து போராட்டங்கள் முன்னெழ வேண்டும்.

வியாபாரிகள் தமக்கிடையேயான ஒப்பந்தங்களுக்காக மோதிக்கொள்வதையும் பின்னர் இணைந்து கொள்வதையும் மனிதாபிமானம் என்று தவறாகப் புரிந்துகொண்டால் அது முழு மக்களைது அழிவிற்கு இட்டுச்செல்லும்.

Exit mobile version