Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையைத் தொடர்ச்சியாக அழிக்க முயலும் USAID : ‘நல்லிணக்கப் பீதியை’ ஏற்படுத்துகிறது.

usaidஅமரிக்க அரசின் நிதியுதவியில் இயங்கும் தன்னார்வ அமைப்பான USAID பொலிவியா, வெனிசூலா, போலிவியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அமரிக்க அரசு உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்வதற்கும், தமது பல்தேசிய நிறுவனங்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், ஏகாதிபத்திய அடிமை அரசுகளைப் பேணவும் உருவாக்கவும் ‘உதவி’ என்ற பெயரில் நாடுகளில் தலையிடுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே USAID . 1970 களின் ஆரம்பத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த இந்த நிறுவனம் தலையிட்ட முதலாவது நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையிலுள்ள மார்கா (MARGA) என்ற அமைப்பிற்கு ‘ஆய்வுகளை’ மேற்கொள்வதற்காஅ 70 களின் ஆரம்பத்தில் இந்த நிதி உதவியை வழங்கியது.

இவ்வாறான தலையீடுகள் மக்களின் போராட்டங்களை அழித்து இலங்கை என்று தேசம் முழுவதையும் சுடுகாடாக்கியது.
மாகாண சபைத் தேர்தல், 13 வது திருத்தச் சட்டம் போன்றவற்றின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பிவிட்டு இனச்சுத்திகரிப்பை இலங்கை அரசு மேற்கொள்கிறது.

இந்த நிலையில் ஊ இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவிகளை வழங்கப்போவதாக USAID அறிவித்துள்ளது. இதனால் 5 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் என்றும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
வன்னிப் படுகொலைகளின் பின்னர் மக்கள் ஒருவேளை உணவிற்காகக் கையேந்தும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்த இத் தன்னார்வ நிறுவனங்களில் அபாயகரமானது USAID.

Exit mobile version