Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையும் இந்தியாவும் பயங்கரவாத ஒழிப்பில் கூட்டு : இந்திய வெளிவிவகார அமைச்சர்

பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
பூட்டானில் நேற்று நடைபெற்ற “சார்க்’ வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பேசும் போது இதனைத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் முன்னெடுக்கும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்பு நட வடிக்கையில் “சார்க்’ அமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவும், இலங்கையும் “சார்க் பயங்கரவாதிகள் குற்றக்கண்காணிப்புப் பிரிவைப்’ பலப்படுத்தி இரு நாடுகளின் படையினர் மத்தியில் தகவல்களைப் பரிமாறுவதில் ஈடுபட்டுள்ளன பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இரு நாடுகளும் கூட்டாக முயன்று வருகின்றன. இதில் ஏனைய நாடுகளும் இணையவேண்டும். எனக் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாத ஒழிப்பு என்ற தலையங்கத்தில் இந்தியாவின் துணையோடு இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தோ, தொடர்ச்சியாக நடைபெறும் தமிழ் இனச் சுத்திகரிப்புக் குறித்தோ எந்த நாட்டின் தலைவர்களும் கருத்துக் கூறவில்லை.

Exit mobile version