Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்தவே எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை வருகிறார் : லலித் வீரதுங்க

இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்தவே அங்கு செல்லவிருப்பதாக இந்திய வெளிவிகார அமைச்சர் கருத்துத் தெரிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, இலங்கை வருவதாக மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று கருத்து வெளியிட்டார்.
இந்திய அமைச்சர் தனது விஜயத்தின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இதுவரை இந்தியாவிடம் இருந்து பாதகமான கருத்துக்களை இந்தியா வெளியிடவில்லை எனவும் வீரதுங்க மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version