Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையுடனான உறவில் பாதிப்புக்கள் இல்லை : இந்தியா

indolankaஇலங்கையுடனான உறவு தொடர்பில் போட்டித்தன்மை எதுவும் இல்லை என்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் சஹிட் அக்பாருடீன் தெரிவித்துள்ளார்.
‘பிஸினஸ் ஸ்டேன்டர்ட்’ என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியின் போதே போதே, பேச்சாளர் சஹிட் அக்பாருடீன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, சீனா – இலங்கையுடன் நெருங்கிய உறவினை கட்டியெழுப்பியுள்ள நிலையில் அது இந்தியாவுக்கு சவாலாக அமையாதா என்று பேட்டி கண்ட ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் நீண்ட கால ராஜதந்திர உறவுகள் நிலவுகின்ற நிலையில், அது எந்தவிதத்திலும் பாதிப்படையாது என்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் சஹிட் அக்பாருடீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருநாடுகளினதும் தொடர்புகள் இருதரப்பினரும் நலன்களுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை புதிய அணுகுமுறையுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் பேச்சாளர் சஹிட் அக்பாருடீன் அறிவித்துள்ளார்.

Exit mobile version