Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் ஹலால் சான்றிதழ் இடைநிறுத்தம் : அரசின் கலாசார அழிப்பு

இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக , இந்தச் சேவையை இதுவரை செய்து வந்த அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த மதவெறி அமைப்புக்களை வளர்த்துவரும் இலங்கை அரசு இவற்றின் ஊடாக ஹலால் உணவுக்க்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. தொடர்ர்சியான மிரட்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்த இந்த அமைப்பு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் ஹலால் சான்றிதழை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டிலிருந்து இலங்கையில் துறை சார்ந்தோர் மூலம் நிறுவப்பட்ட உத்தரவாதமுள்ள நிறுவனமொன்று , ஹலால் சான்றிதழ் வழங்கும் வேலையையும், தயாரிப்பு, செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு உட்பட அனைத்து விஷயங்களையும் செய்யும் என்று அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொண்ட மற்றும் ஹலால் சான்றிதழ் பெறக் காத்திருக்கும் நிறுவனங்களின் அனைத்து விஷயங்களையும் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள இந்த நிறுவனம் கவனிக்கும் என்று உலமாவின் அறிக்கை கூறுகிறது.
ராஜபக்ச பாசிசத்தின் நண்பர்களான புலம் பெயர் குறும் தேசிய வாத அமைப்புக்களும், தமிழ் நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் முஸ்லிம்கள் மீதான ராஜபக்ச அரசின் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை. மாறாக இஸ்லாமியர்கள் மீது இனப்படுகொலை நடத்திய இந்துப் பாசிஸ்டுக்களை ஆதரிக்கின்றனர்.
இலங்கையில் அரச பாசிஸ்டுக்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இஸ்லாமியர்கள் தமிழ்ப் பேசும் ஏனைய மக்கள் பிரிவுகளோடு இணைந்து சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க இவர்கள் தடைவிதிக்கும் அதேவேளை ராஜபக்ச அரசைப் பலப்படுத்துகின்றனர்.
இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஹலால் விவகாரத்தின் பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா தெரிவிகையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் புதிய அமைப்பிற்கு ஒத்துழைப்போம் என்கின்றனர்.

Exit mobile version