Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் வெள்ளைக் கொடியுடன் அகதிகளாவோம் : இளங்கோ ஈழ மீனவர்கள் வறுமையில்

fishermenதிட்டமிட்டபடி 20 ஆம் தேதி இந்திய -இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டால் தமிழக மீனவர்கள் வெள்ளை கொடியுடன் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம் என தேசிய மீனவர் பேரவை தலைவர் என்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: கடந்த 30 ஆண்டுகளாக தமிழக, காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 541 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
401 மீனவர்கள் தற்போது இலங்கை சிறைகளில் உள்ளனர். 113 படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். 772 பேர் காயமடைந்துள்ளனர். ரூ.1000 கோடி அளவுக்கு மீனவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையின் செயலால் மீனவர்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது.
இப்பிரச்னையை தீர்க்க இரு தரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய, தமிழக அரசுகள், அறிவித்தன. வரும் 20-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
அதே போல் இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.

என இளங்கோ கூறினார்.
அதே வேளை இலங்கை மீனவர்கள், குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள மீனவர்களிடம் இனியொரு சார்பில் பேசிய போது, இந்திய ஆழ்கடல் மீன்ப்டிப்படகுள் வடபகுதிக் கரையோரங்களில் வளங்களை அழித்துவிட்டதால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளபட்டுள்ளனர் என்று கூறினர். குறிப்பாக காரைநகர் போன்ற பகுதிகளில் மீனவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரசு தமிழக் மற்றும் இலங்கை மீனவர்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. புலம் பெயர் அரசியல் வாதிகள் ஈழத் தமிழர்களோடு தொடர்புகளற்ற நிலையில் தமிழக மீனவர்களை நிபந்தனை இன்றி ஆதரிக்கின்றனர்.
தமிழக, காரைக்கால் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணா விட்டால் வெள்ளை கொடியுடன் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம் என்று இளங்கோ மேலும் கூறினார். தீர்வு என்பது இந்தியப் பெருமுதலாளிகளின் விருப்புக்கு ஏற்றதாக அல்லாமல் ஈழத்தில் பேரினவாதத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட மீனவர்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்..

Exit mobile version