நாட்;டில் தற்போது இருப்பது கட்சி ஆட்சியல்ல, குடும்ப ஆட்சி என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது தொழிற்சங்கங்கள் தனித்தனியாக போராட்டங்களை நடத்துவதால், பொது வேலைத்திட்டம் ஒன்றுக்கு செல்ல முடியாதுள்ளது. இதன் பயனை அரசாங்கம் பெற்று வருகிறது. ஜே.வி.பியின் தலைமையிலான தொழிற்சங்கங்கள் தனி போராட்டங்களை நடத்துகின்றன.
அனைவரும் உழைக்கும் மக்களுக்காகவே போராட்டங்களை நடத்துகின்றனர்.2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெற்றிகரமான வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டோம். அது போர் நடைபெற்ற காலத்தில் நடந்தது. எனினும் போர் முடிவடைந்த பின்னர், தொழிற்சங்கங்கள் உழைக்கும் மக்களின் கோரிக்கைகாக ஒன்றிணைய முடியவில்லை எனவும் லால் காந்த கூறியுள்ளார்.