நாட்டில் மதவாதத்தை தூண்டி அதன் மூலம் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பயன்படுத்தி வன்முறைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுபாலன சேவா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பு முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்திவரும் நிலையில் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் குறித்து எதுவும் குறிப்பிடாமல் இஸ்லாமியர்களை அவதூறு செய்துள்ளார் அமைச்சர்.
பொதுபாலன சேவா என்ற பௌத்த மத அடிப்படைவாத அமைப்பின் பின்னணியில் ராஜபக்ச குடும்பமே செயற்படுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் முஸ்லீம்கள் மீதான பெருந்தேசிய வன்முறை ஒன்றை இலங்கை அரசு நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் கட்டவிழ்த்துவிடத் தயாராகிவருவருகிறதா எனச் சந்தேகங்கள் எழுகின்றன.