Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தப்பட்ட ஊடகம்

ராஜபக்ச குடும்பத்தினரால் இலங்கையில் திணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார ஆட்சியில் ஊடகவியலாளர்கலளுக்கு உலகில் ஆபத்து நிறைந்த நாடாக அமைப்பு பிரகடனப்படுத்தியிருந்தது. பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் இன்னும் பலர் தாக்கப்படும் ஊடகத் துறை சர்வாதிகாரத்தின் பிடிக்குள் முற்றாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல தடவைகள் மிரட்டப்பட்ட லங்கா ஈ நியூஸ் மறுபடியும் மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கிறது.
இணையத்தளத்தின் அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்தின் உரிமையாளரை இம்முறை அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. நேற்று (08) லங்கா ஈ நியூஸ் அலுவலகத்திற்கு சென்ற கட்டத்தின் உரிமையாளர் உடனடியாக தமது கட்டடத்தில் இருந்து வெளியேறுமாறு இணையத்தளத்தின் ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளார். அத்துடன், சகல தொலைபேசி இணைப்புகளை துண்டித்து, அலுவலகத்திற்கு நுழையும் பிரதான வழியையும் பூட்டு போட்டு மூடியுள்ளார்.
குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள அந்த கட்டடத்தின் ஒப்பந்தகாலம் இன்னும் முடிவடையாத நிலையில், உரிமையாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக லங்காஈநியூஸ் இணையத்தளத்தின் செயதியாசிரியர் பேர்னாட் ரூபசிங்க வெலிகடை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 12 வருடங்களாக கட்டத்திற்கான வாடகையை தவறாது செலுத்தி வரும் நிலையில், உரிமையாளர் அரசியல் அழுத்தம் காரணமாக திடீரென மனமாற்றம் அடைந்துள்ளதாக ரூபசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உரிமையாளரின் நடவடிக்கை காரணமாக இணையத்தளத்தை பதிவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தினால் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலைமையில் அதன் பிரதான ஆசிரியர் சந்தருவான் சேனாதீர தனது பாதுகாப்பு கருதி நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் சுயாதீன ஊடகவியலாளராக இணையத்தளத்தில் பணியாற்றி வந்த பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போய் 136 நாட்கள் கடந்துள்ளன.

Exit mobile version