Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பழ. நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46) எனபவரே சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயில் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு தீக்குளித்துள்ளார்.
இலங்கையில், நிலவும் யுத்தம் காரணமாக அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் சிலர் சிவானந்தனின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.இதனை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அவரை பொலிஸார் அனுமதித்துள்ளனர். அவரது உடலில் 80 சதவீத அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

Exit mobile version