இலங்கையில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் குறைந்தளவான பொருளாதார வளர்ச்சியையே எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமைகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், நிலைமைகளை கட்டுப்பாட்டுக் கொண்டுவரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பணவீக்க வீதம் மேலும் உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பாரியளவில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையினால் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.