Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் பலியெடுக்கப்பட்ட பிரித்தானியப் பிரஜை கோபிதாஸ்:புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

welikadaபிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்ற கோபிதாஸ் விஸ்வலிங்கம் என்ற தமிழர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2007ம் ஆண்டு மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகளாக விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்ட இவர் வெலிகட்டைச் சிறைச்சாலையின் குளியலறையில் பிணமாகக் காணப்பட்டார். வெள்ளியினத்தைச் சேர்ந்த் உல்லாசப் பயணம் செல்லும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நாய் கடித்தாலே விசாரணைக்கு உத்தரவிடும் பிரித்தானிய அரசு கோபிதாஸ் பலியெடுக்கப்ப்படும் வரை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது. பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனது பிரஜையின் சிறைச்சாலையைக் கடந்தே டேவிட் கமரன் சென்றுள்ளார்.

கோபிதாசின் மரணம் சந்தேகத்திற்கு இடமானது என ஏனைய கைதிகள் தெரிவிக்கின்றனர். பிரித்தானிய அரச அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்து இணையங்களில் செய்திகளாகப் பதிந்துகொள்ளும் பிரித்தானிய அமைப்புக்கள் கோபிதாசின் மரணம் குறித்த விசாரணையை நடத்துமாறு பிரித்தானிய அரசைக் கோரவேண்டும். பிரித்தானிய அரசு வெள்ளையினத்தைச் சாராதவரின் மரணம் என்பதால் அக்கறை காட்டவில்லை என்பதை உலகத்திற்குக் கூறவேண்டும். பிரித்தானிய அரசு விசாரணை நடத்த மறுத்தால் புலம்பெயர் மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தவேண்டும்.

Exit mobile version