Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் பலர் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்படுகின்றனர் :மன்னிப்புச் சபை

தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிராக விமர்சனம் செய்வோரை கைது செய்தல், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான குற்றச் செயல்களின் மூலம் இலங்கை அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் சாம் சப்பாரி தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அரசின்  சட்டவிரோத கைதுகள் தொடர்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என சப்பாரி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கைதுகள் மற்றும் பலவந்தமான காணாமல் போதல்கள் போன்ற சம்பவங்கள் இலங்கையில் வழமையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதில்லை எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை 67 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

Exit mobile version