Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் பர்மாவின் பாணியில் இன மோதலை ஏற்படுத்த முயற்சி : கொழும்பு ஊடகம்

Gotaபாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாவின் பின்புலத்தினில் செயற்பட்டுவரும் பொதுபலசேனா இனக்கலவரத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பர்மாவில் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தை ஒத்த இனமோதல் ஒன்றை உருவாக்கவிருப்பதாக அச்செய்தியினில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டுகளில் பர்மாவில் 969 என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

இது அங்கிருந்து சிறுபான்மை முஸ்லிம்களை வெளியேற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
அத்துடன் பல முஸ்லிம் சிறுவர்களை கடத்திச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களையும் மேற்கொண்டது.
தற்போது அதே போன்ற செயற்பட்டையே பொது பலசேனா அமைப்பு இலங்கையில் ஆரம்பித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version