நிறைவேற்று அதிகார முறைமை சிறுபான்மை மக்களுக்கு மட்டும் ஆபத்தானதல்ல எனவும், முழு நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாகக் கொண்டு ஜே.வி.பி இரண்டு தடவைகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்த போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை எனவும், மீண்டுமொரு தடவை அதே நிபந்தனையுடன் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஜே.வி.பி ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண சட்ட திட்டங்களின் அடிப்படையில் பொதுமக்கள் அனுபவிக்கக் கூடிய சில உரிமைகளைக் கூட சிறுபான்மை மக்கள் சரியான முறையில் அனுபவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளனதென அவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட ஒரு நபரின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்த தீர்மானங்களை எடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.