சர்வதேசப் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளரும் இலங்கையைச் சேர்ந்தவரும், வன்னி இனப்படுகொலையில் மேற்கு அரசுகளின் அடியாளாகச் செயற்பட்டவருமான ரோகான் குணரட்ன இது குறித்துத் கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்தார். தலிபான்கள் சவுதி அரேபியாவைத் தளமாகக்கொண்டு அமெரிக்க ஆதரவுக் கெரில்லாக்கள் போன்று அமெரிக்க எதிர்ப்பு அரசுகளுக்கு எதிராகவே அதிகமாகச் செயற்படுகின்றன. மறைமுகமாகவும், நேரடியாகவும் அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளால் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தலிபான்கள் இலங்கையில் செயற்படுவதாகக் கூறுவதும், ரோகான் குணரத்னவின் தலையீடும், பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டதாக அமையலாம். ரோகான், மேற்கு அரசுகள், இலங்கை அரசு இணைந்த பயங்கரவாதம் திட்டமிடப்படுகிறதா என்ற அச்சம் பலரிடம் உருவாகியுள்ளது.
இலங்கையில் பொது பல சேனா போன்ற பௌத்த பயங்கரவாத அமைப்புக்களே மியன்மார் இனக்கொலை பௌத்த துறவிகளுடன் இணைந்து சர்வதேசப் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. பௌத்த பயங்கரவாதிகளை வளர்த்தெடுக்கப் பயன்படும் இன்டர்போல் ரோகன் குணரட்ண ஆகியோர் இலங்கை அரசுடன் இணைந்து நடத்தும் இச் சதித்திட்டம் குறித்து மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது தேவையானது.