எனினும் உண்மையில், வடக்குகிழக்கில் தமிழ் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்
ஜனாதிபதி மறுத்தாலும் கூட வடக்குகிழக்கு மத்திய மலைநாடு என்ற இடங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கிறீஸ் பூதங்கள் என்ற சர்ச்சை தொடர்கிறது
இதன்காரணமாக பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
குறித்த நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினரே மேற்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரி;ல் பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்
இந்தநிலையில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை நடத்துபவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவர் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்
எனினும் எவ்வாறு ஜனாதிபதி அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக கூறமுடியும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கேள்வி எழுப்பியுள்ளது
வடக்குகிழக்கில் சிங்கள ஆண் இராணுவ வீரர்கள், தமிழ்பேசும் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகி;ன்றனர்
பெரும்பாலான இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகி;ன்றனர்
எனினும் அரசாங்கம் வடக்குகிழக்கில் நல்லெண்ணத்தை கட்டியெழுப்புவதாக கூறிவருகிறது
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் பொய்யான தகவலை வழங்கி வருகிறது
இன்னும் 8000 பேர் மாத்திரமே மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது
எனினும் உண்மை நிலவரப்படி 60 ஆயிரம் பேர் இன்னும் தற்காலிக கொட்டகைகளிலும் இடைதங்கல் முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர்
மெனிக் பாமில் 7 ஆயிரம் குடும்பங்கள் உள்ள நிலையி;ல் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சம் முஸ்லிம்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை
கைதுசெய்யப்பட்ட சரணடைந்த முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீளிணைக்கப்படுவதாக கூறப்படுகிறது
எனினும் கண்கண்ட சாட்சியங்களின்படி கைதுசெய்யப்பட்ட சரணடைந்த பல போராளிகள் இன்னும் எங்கிருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை
சமூகத்துடன் மீளிணைக்கப்படுவதாக கூறப்படும் முன்னாள் போராளிகள், மீண்டும் கைதுசெய்யப்படுகிறார்கள்
அவர்களுக்கு உரிய வாழ்வாதார வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை
அத்துடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது
இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தைகளை எடுத்தால், அதிகார பரவலாக்கல் மூலம் இனப்பிரச்ச்pனைக்கு தீர்வுக்காணப்போவதாக அரசாங்கம் கூறிவருகிறது
எனினும் அரசாங்கத்தினால் எவ்வித முன்னேற்றமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை
கடந்த மே மாதத்தில் இந்தியாவுடன் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் 13 வது அரசியல் அமைப்பின்கீ;ழ் தீர்வு முன்வைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் கூறியது
தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உரிய காத்திரமான விடயங்களை அரசாங்கம் முன்வைக்கவில்லை
இதன் காரணமாக அந்த பேச்சுவார்த்தை இடையில் கைவிடப்பட்டுள்ளது
இதற்கிடையில் ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் புலிகள் அழிக்கப்பட்டனர். எனவே அங்கு அதிகார பரவலாக்கம் எதுவும் அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவை இனப்பிரச்சினை தீர்வுக்காக பரிந்துரைத்துள்ளது
எனினும் அதில் ஆளும் கூட்டணியை சேர்ந்த அதிக கட்சி உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர்
இதனை தவிர வடக்குகிழக்கு உட்பட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இராணுவ மயத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதிலேயே இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி நிற்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது
இலங்கையின் அதிகாரங்கள் ஜனாதிபதி, அவரின் சகோதரர்கள் மற்றும் இராணுவத்தினரிடமே தற்போது உள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குறிப்பிட்டுள்ளது