Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் வரை போராடுவோம்: சி.​ மகேந்திரன்.

 
 ​ இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் வரை போராட வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி.​ மகேந்திரன்.

​ ​ திருச்சியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாட்டில்,​​ இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற “மக்கள் கலை இரவு’ நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:

​ ​ “ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் சாதாரணத் தாக்குதல் என்று கூற முடியாது.​ இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எழுதாத இலக்கியங்கள் இல்லை;​ திரைப்படங்களும் இல்லை.

​ ​ ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல வேறு யார் மீதாவது நடத்தப்பட்டிருந்தால் உலகில் யாராவது பார்த்துக் கொண்டிருப்பார்களா?

தமிழர்களின் உயிரைப் பறிக்கக் காரணமானவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்.​ இது மனித இனத்துக்கே நடந்த கொடுமை.

​ ​ ​ இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் போதுதான் நமது போராட்டம் முடிவுக்கு வரும்.​ அதுவரை கலை மூலமும்,​​ உணர்வுகள் மூலமும் நாம் போராடுவோம்’ என்றார் அவர்.

​ ​ விழாவில்,​​ குமரி முரசு கலைக்குழுவின் நாட்டுப்புற ஆட்டங்கள்,​​ புதுச்சேரி வேலுசரவணன் வழங்கும் சிறார் நாடகம்,​​ திருவண்ணாமலை கோவி.​ செல்வராஜ் குழுவினரின் நிஜ நாடகம்,​​ குமரி வந்தனம் கலைக்குழுவின் வீதி நாடகங்கள்,​​ புதுச்சேரி ஜயமூர்த்தியின் நாடகங்கள்,​​ பாடல்கள்,​​ திருச்சி ஜீவா கலைக்குழுவினரினன் மண்ணின் பாடல்கள்,​​ கோவை திலீப்குமார் குழுவினரின் சிலப்பதிகாரம் நாடகம் ஆகியவை நடத்தப்பட்டன.

Exit mobile version