திருச்சியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாட்டில், இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற “மக்கள் கலை இரவு’ நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
“ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் சாதாரணத் தாக்குதல் என்று கூற முடியாது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எழுதாத இலக்கியங்கள் இல்லை; திரைப்படங்களும் இல்லை.
ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல வேறு யார் மீதாவது நடத்தப்பட்டிருந்தால் உலகில் யாராவது பார்த்துக் கொண்டிருப்பார்களா?
தமிழர்களின் உயிரைப் பறிக்கக் காரணமானவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். இது மனித இனத்துக்கே நடந்த கொடுமை.
இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் போதுதான் நமது போராட்டம் முடிவுக்கு வரும். அதுவரை கலை மூலமும், உணர்வுகள் மூலமும் நாம் போராடுவோம்’ என்றார் அவர்.
விழாவில், குமரி முரசு கலைக்குழுவின் நாட்டுப்புற ஆட்டங்கள், புதுச்சேரி வேலுசரவணன் வழங்கும் சிறார் நாடகம், திருவண்ணாமலை கோவி. செல்வராஜ் குழுவினரின் நிஜ நாடகம், குமரி வந்தனம் கலைக்குழுவின் வீதி நாடகங்கள், புதுச்சேரி ஜயமூர்த்தியின் நாடகங்கள், பாடல்கள், திருச்சி ஜீவா கலைக்குழுவினரினன் மண்ணின் பாடல்கள், கோவை திலீப்குமார் குழுவினரின் சிலப்பதிகாரம் நாடகம் ஆகியவை நடத்தப்பட்டன.