தெற்காசியாவின் முக்கிய வர்த்தக மற்றும் அரசியல் மையமாக இலங்கையை மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல் நேரத்தில் பிளேர் மற்றும் அவரது மனைவியின் பயணம் கருதப்படுகின்றது.
இலங்கைக்கு இவர்கள் இருவரும் பயணம் செய்வதற்கு முதல் நாள் போர்க்குற்றவாளி ஒருவரைக் காப்பாற்றி விடுதலை செய்துவிட்டே ரொனி பிளேரின் மனைவி செரி பிளேர் இலங்கை சென்றார்.
1994 ஆம் ஆண்டு ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஏறக்குறைய ஒரு மில்லியன் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பிணக்காடாகக் காட்சியளித்தது. உலகின் மிகப்பெரும் படுகொலைகளில் ருவாண்டா இனப்படுகொலையும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ருட்சி இன மக்கள் மீதான படுகொலைக்கு எதிராக ருவாண்டா நாட்டுப்பற்று முன்னணி போராட்டி வந்தது. இனப்படுகொலையை நிறுத்தியதில் இம் முன்ணையின் இராணுவப் பிரிவு பெரும் பங்கு வகித்தது.
இனப்படுகொலை நிறுத்தப்பட்ட பின்னர் முன்னணியின் இராணுவப் பிரிவு பல்வேறு படுகொலைகளை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
அப்படுகொலைகளைத் தலைமைதாங்கியவரான இராணுவத் தளபடிதி ஜெனரல் கராக்கே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. இரண்டு பகுதிகளிலும் நடைபெற்ற படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களின் பின்னணியில் செயற்பட்ட பிரஞ்ச்சுப் படைகளின் மீது பெயரளவிலாவது குற்றங்கள் சுமத்தப்படவில்லை.
ஜெனரல் கரக்கே இன்று ருவாண்ட்டாவின் சக்தி மிக்க மனிதர்களுள் ஒருவர். இராணுவப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரியும் அவரே.
ஸ்பானியவில் அவருக்கு எதிரான போர்க்குற்றம் விசாரணை செய்யப்பட்டு பிடியாணையும் வினியோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 22 ம் திகதி பிரித்தானியாவுக்குப் பயணம் செய்த போது ஹீத்ரோ இமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். கைதின் பின்ன கரக்கேயை விடுதலை செய்வதற்கு செரி பிளேர் வாதிட்டார். போர்க்குற்றங்கள் குறித்த எதையும் பேசாத செரி பிளேர், பிரித்தானியச் சட்டங்களின் அடிப்படையில் அவர் தண்டனை பெற முடியாது என்று வாதிட்டு கராக்கேயை விடுதலை செய்தார்.
இலங்கையில் தேர்தல் அதன் பின்னரான ஜெனீவாத் தீர்மானத்தின் அடிப்படையிலான போர்க்குற்ற விசாரணை தொடர்பாகப் பேசப்படும் காலத்தில் பிளேர் குடும்பத்தின் இலங்கைப் பிரசன்னம் கவனத்திற்குரியது.
தேர்தல் முடிவுகள் வெளிவர முன்பே ராஜபக்ச தோல்வியை ஒப்புக்கொண்டதும், தேர்தலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் முயற்சிகளில் வழமைபோல ராஜபக்ச ஈடுபடாமையும் பல சந்தேகங்களை உருவாக்கியிருந்தன. ராஜபக்சவின் போர்க்குற்ற விசாரணையைக் கிடப்பில் போடுவதற்கான முயற்ட்சியில் பிளேரின் பங்கு உள்ளதா என்பதற்கான ஆதராங்கள் இல்லை எனினும் அதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது,
எது எவ்வாறாயினும் இலங்கை முழுவதையும் ஏகாதிபத்தியங்களுக்கு இரையாக்கும் செயலை சிங்களப் பேரினவாதிகளும் அதற்கெதிராகப் போராடுவதாகக் நாடகமாடிய தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளும் நடத்தி முடித்துவிட்டார்கள்.