இலங்கையில் அதிகமாக இடம்பெற்று வரும் சித்ரவதைகள் குறித்து ஆசிய சட்ட வளங்கள் மத்திய நிலையம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான சித்ரவதைகளைத் தடுக்க ஐக்கிய நாடுகளின் இணக்கப்பாடுகளை அமுல்படுத்த இலங்கை தவறியுள்ளது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 16வது கூட்டத் தொடரில் எழுத்து மூலமான விடயங்களை முன்வைத்து, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் அமுல்படுத்தப்படாத ஐக்கிய நாடுகள் இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆசிய சட்ட வளங்கள் மத்திய நிலையம் விரிவான கருத்துக்களை முன்வைத்துள்ளது.
தேசிய இறையாண்மைக்கு பங்கம் ஏற்படும் எனக் கூறி, இலங்கை அரசாங்கம் அதனை அமுல்படுத்துவதை நிராகரித்து வருகிறது எனவும் ஆசிய சட்ட வளங்கள் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.