Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் அமெரிக்க இராணுவமும் ராஜபக்ச பாசிஸ்டுக்களின் இராணுவ வியாபாரமும்

இலங்கை இராணுவத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய
இலங்கை இராணுவத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய

தெற்காசியாவின் இராணுவ வர்த்தக மையமாக இலங்கை மாறி வருகின்றது. இராணுவப் பொருளாதாரம், இராணுவக் குடியிருப்புக்கள், தனியார் இராணுவ நிறுவனங்கள், ஏனைய இராணுவ நாடுகளுக்கான தங்குமிட வசதிகள், விமானப்படைக விமானங்களின் இரகசிய தரிப்பிடங்கள் என்ற பல்வேறு இராணுவ சேவைகளை இலங்கை நடத்திவருகிறது.
இலங்கையில் தெற்காசிய இராணுவ மையத்தைக் கட்டியெழுப்புவதற்கு ராஜபக்ச அரசுடன் இணைந்து அமெரிக்கா இந்தியா உட்பட ஏகாதிபத்திய நாடுகள் செயற்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் இன்று (14.11.2014) நடைபெற்ற மாநாடு கண்ணிவெடி மற்றும் கருவிகள் தொடர்பான மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஐ.நாவிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க இலங்கையில் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்படுவதாகத் தெரிவித்தார்.
2500 சதுரகிலோமீற்றர் அதிக ஆபத்தான பகுதி, கடந்த 5 வருட காலப்பகுதியில் 1,128.336 வெடிபொருட்களை அகற்றியுள்ளோம், இவ்வருடம் மாத்திரம், 55.762 வெடிபொருட்களை அகற்றியுள்ளோம் என்று தெர்வித்த தூதுவர் அத்துடன் இலங்கையின் இந்த வெற்றிகரமான அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் நிலக்கண்ணிகளை அகற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு அமெரிக்க இராணுவம் நிலைகொண்டுள்ளது.(காணொளி)
அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கையைத் தண்டிக்க்கும் என மக்களை ஏமாற்றிவரும் தேசிய வியாபாரிகளும் இலங்கை அரசும் இவற்றை மக்களிடமிருந்து மறைக்கின்றன.
அமரிக்க அரச விமானப்படையின் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியாகியிருக்கும் வாசகங்களின் தமிழாக்கம்:* தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மிருகத்தனமான பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் போராடி வெற்றிபெற்றது. போரின் முடிவில் மில்லியன் கணக்கான கண்ணி வெடிகள் மோதல் நடைபெற்ற இடங்களில் விட்டுவைக்கப்பட்டிருந்தன. இலங்கையினதும், ‘சர்வதேச சமூகத்தினதும்’ போருக்குப் பின்னான பிரதான முயற்சிகளில் கண்ணிவெடிகளை அகற்றி அந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களைக் குடியேற்றுவதும் ஒன்றாகும்.”
இலங்கை அரச படைகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது நன்மை தருகிறது என்கிறார் இலங்கையில் தங்கியிருக்கும் அமரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜோசுவா கென்னடி
இலங்கை அரசபடைகளுக்கு மருத்துவ தொழில் முறையைக் கற்பிப்பதற்காக தாம் அங்கு தங்கியிருப்பதாக அமரிக்க அரச படையின் மற்றொரு கொமாண்டர் கூறுகிறார்.
பசிபிக் ஏஞ்சல் என்ற அமரிக்க இராணுவத்தின் உதவிப் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக அமரிக்க அரசபடைகளின் **பசிபிக் பிராந்திய இணையம் கூறுகிறது. கடற்படை, விமானப்படை, தரைப்படை ஆகியவற்றைச் சேர்ந்த பொறியியலாளர்கள் அங்கு தங்கியிருப்பதாக கூறும் இணையம், பாடசாலைகளைப் புனரமைக்கும் பணிகளிலும் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு குழந்தகளுக்கு கல்வி பெற யாழ்ப்பாணத்தில் வசதி செய்கிறோம் என்கிறது அமரிக்க அரச படைகளின் இணையம்.
2013 ஓகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பசிபிக் ஏஞ்ஜல் நடவடிக்கைக்காக நூறு அமரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்ணிவெடி அகற்றும் நோக்கத்திற்காக நூற்றிற்கும் அதிகமான அமரிக்கப்படைகள் நிலை கொண்டுள்ளன எனத் தெரிவிக்கின்றன.இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் பல்வேறு அளவுகளில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்கத் துருப்புகளை ஆசிய பசிபிக் கட்டளையகம் Pacific Command (USPACOM) கட்டுப்படுத்துகிறது..
கண்ணிவெடி அகற்றுதல் தொடர்பாக இலங்கை அரசு விடுத்துள்ள அழைப்பு இலங்கையை அமெரிக்காவுடன் இணைந்து இராணுவ மயப்படுத்தும் நோக்கோடு விடுக்கப்பட்ட அழைப்பாகவே கருதப்பட வேண்டும்.

Exit mobile version