05.11.2008.
கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமாக அமுல்செய்யப்பட்டுவருகின்றன.
மேற்படி விடயம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, யுனிசெப் ஆகிய அமைப்புகளால் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதேவேளை, கடந்த 10 மாத காலப் பகுதிக்குள் 1,014 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டிருக்கும் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சிறுவர் உரிமை மீறல்கள் தொடர்பாக 394 முறைப்பாடுகளும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 620 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பல உறுதியான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ள போதிலும் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் சிறார்கள் பலர் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக மேற்படி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி திமுது கலப்பதி தெரிவித்துள்ளார்.