Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை!:சந்திரிகா குமாரனதுங்க

“எனது கட்சியே இலங்கையில் அரசாட்சி புரிகிறது. ஆனால் அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கேரளாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனைச் சந்தித்த பின் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் அச்சமும் சுதந்திரமற்ற சூழலும் கலந்து காணப்படுகின்றன. புலிகளுடனான மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னரும் கூட இதே நிலைமைதான் இன்றும் காணப்படுகின்றது ” என்றார்.

இலங்கையின் ஜனநாயகம் பற்றிக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த சந்திரிக்கா, அங்கு பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரனதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மயில்வாகனம் நிமலராஜன், நடேசன், தர்மரட்ணம் சிவராம் ஆகியோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version