Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் எந்த ஒரு காலப்பகுதியையும் விட பொது மக்கள் அச்சத்துடனும் பாரிய பொருளாதார நெருக்கடியுடனுமே வாழ்கின்றனர்

எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கக் கூடிய பலமான அரசாங்கம் இல்லாமை கவலையளிக்கும் விடயமாகும்.பொது மக்களை அச்சுறுத்தி, சிறை வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் பலமான எதிர்க்கட்சி இல்லையெனக் கூறுவது வேடிக்கையாகும் என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஊடகச் சுதந்திரத்தை அழித்து பொது மக்களுக்குப் பாரிய வாழ்க்கைச் சுமையை வழங்கியுள்ள தற்போதைய அரசாங்கம், ஒருபோதும் பலமான அரசாங்கம் எனக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். பலமான எதிர்க்கட்சி நாட்டில் இல்லை என அரசாங்கம் கூறும் கருத்து தொடர்பாக இன்று விளக்கமளிக்கையிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி. மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

ஜனநாயக ஆட்சியை நடத்த முடியாத அரசாங்கம் பலமான எதிர்க்கட்சி தொடர்பாக பேசுவது வேடிக்கையானது. இன்று இலங்கையில் கடந்த எந்த ஒரு காலப்பகுதியையும் விட பொது மக்கள் அச்சத்துடனும் பாரிய பொருளாதார நெருக்கடியுடனுமே வாழ்கின்றனர்.

 

 

Exit mobile version