Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் உயிரியல் பசளை கண்டுபிடிப்பு:ராஜபக்ச அரசு அழித்துவிடும்

seniveratnaஇலங்கையில் புதிய வகை உயிரிய உரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பயோஃபில்ம்(biofilm) என்கின்ற கூட்டு நுண்ணுயிரிகளின் படலத்தை ஒரு தொழிநுட்பமாகப் பயன்படுத்தி இந்த விவசாய உரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டி அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுத்துறைப் பேராசிரியர் காமினி செனவிரட்ன தெரிவித்தார். ‘குறிப்பாக பக்டீரியாக்கள், பங்கஸுகள் போன்ற நுண்ணுயிரிகள் அடங்குகின்ற தொழிநுட்பம் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு இதன்மூலம் பெருமளவு உயிரிய இரசாயனம் கிடைக்கிறது’ என்றார் பேராசிரியர் காமினி செனவிரட்ன. கடந்த 10 ஆண்டுகாலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன உயிரிய உரத்தின் மூலம் இரசாயன உரத்தின் பாவனையை 50 வீதத்தால் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரசாயன உரத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை வெகுவாக குறைக்க முடிவதுடன் அறுவடைகளையும் அதிகரிக்க முடியும் என்பது தேயிலை விவசாயத்தில் நடந்துள்ள சோதனைகளில் உறுதியாகியுள்ளதாக பேராசிரியர் செனவிரட்ன கூறினார்.

வழமையில், தனித்தனி நுண்ணுயிரி ரகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுவரும் வழமையான உயிரிய உரங்களைவிட, பல்வகை கூட்டு நுண்ணுயிரிக் குடும்பங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பயோஃபில்ம் உயிரிய உரத்தில் பலன்கள் அதிகம் என்பது தான் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், நெல் மற்றும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மருத்துவத்துறையில் பல நோய்களுக்கு காரணமாக இருப்பதாக அறியப்பட்ட பயோஃபில்ம் என்ற ‘நுண்ணுயிரிகளின் கூட்டு’ இயல்பினையே விஞ்ஞானிகள் இங்கு விவசாய உரத் தயாரிப்பிற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். நாட்டில் ஏற்கனவே வணிக மயப்படுத்தப்பட்டுவிட்ட இந்த உரத்தை வெளிநாடுகளுக்கும் கொண்டுசெல்லும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. இலங்கையில் இரசாயன உரத்தை வாங்குவதற்கு அரசு மானியம் அளிக்கின்றது. அந்த மானியத்தை உயிரிய உரத்திற்கு வழங்குவதற்கு தொழிநுட்ப ஆய்வுத்துறைக்கான அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பேராசிரியர் செனவிரட்ன கூறினார்.

பல்தேசிய நிறுவனங்களதும், ஏகாதிபத்திய அரசுகளதும் அடியாள் படையான ராஜபக்ச பாசிச அரசு இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பைக் கிடப்பில் போட்டுவிடும் என்பதுவே உண்மை.

இலங்கை முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் உயிர்கொல்லும் மர்மமான சிறுநீரக வியாதி ஒன்று பரவிவருவது கடந்த இரண்டுவருடங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கில் சுன்னாகம் பிரதேசத்திலும், மலையகத்திலும் இந்த நோய் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலிகொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே வகையான நோய் எல்- சல்வடோர் உட்பட பல லத்தீன் அமெரிக்க விவசாய நாடுகளிலும் பரவியிருந்தது. பல்வேறு உள்ளூர் நிறுவனங்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் பயன்படுத்தப்படும் களைக் கொல்லி மருந்து ஒன்றே இந்த நோய்க்கான அடிப்படைக் காரணம் எனக் கண்டறியப்பட்டது..

இதனைப் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மருந்துகள் பலனளிக்காமல் மரணித்துப் போயினர்.

களைகளை மட்டுமன்றி மனிதர்களையும் கொன்று பேரழிவை ஏற்படுத்தும் இந்தக் களைநாசினியைப் தடைசெய்ய வேண்டும் என உள்ளூர் அமைப்புக்கள் பல ராஜபச்க அரசிற்கு எதிராகப் போராடி வந்தன.

குறிப்பாக தேயிலைச் செடிப் பயிர்ச்செய்கைக்கும், நெல் வயல்களிலும் பயன்படுத்தப்படும் மொன்சந்தோ(monsanto) என்ற களை நாசினியே அழிவிற்குக் காரணம் என்றதும் இலங்கை அரசு அதனைத் தடைசெய்து மாற்று வழிகளைப் பயன்படுத்துவதாக அறிவித்தது.

களைகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளில் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருட்களை இலங்கை, இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பேரிழப்புக்களை ஏற்படுத்துகிறது என Consortium of Investigative Journalists என்ற அமைப்பு பல்வேறு விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படியில் தெரிவித்திருந்தது.

கிளிபோசைட் என்ற இரசாயனப் பொருள் கலந்துள்ள கிருமி நாசினிகளும் களைக் கொல்லிகளும் இந்த நோயை ஏற்படுத்துவதால் மகிந்த ராஜபக்ச அரசு இவற்றிற்குத் தடைவிதிப்பதாக 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எம்.சந்திரசேன என்ற உதவியமைச்சர் அறிவித்தார்.

அமெரிக்க பல்தேசிய நிறுவனமான மொன்சாந்தோவிடம் பல மில்லியன்களைப் பெற்றுக்கொண்ட ராஜபக்ச குடும்பம் கிருமிநாசினிகளுக்கான தடையை நீக்கியுள்ளது. அமெரிக்க அரசின் செல்லப்பிள்ளையான இந்த மொன்சாந்தோ நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக மொன்சாந்தோ பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டப்பிரிவை அமெரிக்க அதிபர் ஒபாமா நிறைவேற்றினார் இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசின் நிரந்தர அடிமையான ராஜபக்ச அரசு புதிய கண்டுபிடிப்பான உயிரியல் உரத்தை அழித்துவிடும் என்பது உறுதி.

உலகில் ஒரு ஹெக்டேயர் விவசாய நிலத்தில் அதிகளவில் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்துகின்ற நாடு இலங்கை என்று ஐ.நா உலக சுகாதார ஸ்தாபனத்தின் உள்ளக அறிக்கை ஒன்றை உள்நாட்டு சுகாதார நிபுணர்கள் மேற்கோள்காட்டியுள்ளனர்.

ஊடக மாபியா விஜய் தொலைக்காட்சியை லண்டனில் தொடங்கிவைத்த நடிகர் விக்ரம்

அமெரிக்க அரசு இலங்கையில் மனித உரிமையில் அக்கறை கொள்கிறதா கொலை செய்கிறதா?
Exit mobile version