Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் இதுவரை நல்லிணக்கம் ஏற்படவில்லை எனத் தெரிந்துகொண்ட பிரித்தானியா

alistair_burtநல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து நவனீதம்பிள்ளை கருத்து வெளியிட்டிருந்தார். நவனீதம்பிள்ளை சட்டம் ஒழுங்கு, தனிமனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், மாற்றுச் சிந்தனையாளர் ஒடுக்கு முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுயிருநதார். இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆறு நாள் இலங்கை விஜயத்தினை அடுத்து கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பிலேயே அலிஸ்டயர் பேர்ட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் பின்னரான செயற்பாடுகள் மற்றும் அவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் இது தொடர்பில் தமது அரசு கவனம் செலுத்துவதாகவும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பேர்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் இதுவரைக்கும் பிரித்தானியாவிற்கு தெரியாது என்று கூறுவது கேலிக்கூத்து. பிரித்தானிய அரசின் அக்ஷன் எயிட்ஸ் நிறுவனமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்னார்வ நிதி வழங்கும் நிறுவனமும் இலங்கையில் மூலை முடுக்கெல்லாம் கிளைபரப்பி மக்களுக்குப் பதிலாகத் தாம் போராடப்போவதாகப் போருக்குப் பின்னான காலப்பகுதி முழுவதும் கூறிவருகிறார்கள்.

Exit mobile version