இதன் அடிப்படையிலேயே இலங்கையிலும் ஆட்சி மாற்றம் தேவை என சில மேற்குலக நாடுக்ள விரும்பி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருவதாகவும் தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார். மேற்படி காரணங்களைக் குறிப்பிட்டு லிபியா, ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில், இவ்வாறு மேற்குலக நாடுகள் தலையீடு செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
-அமரிக்கா போன்ற நாடுகளின் தலையீட்டுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் ராஜபக்ச பாசிசம் கூட மேற்கு நாடுகளால் தான் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்பதை தமரா வசதியாக மறைத்துவிடுகிறார்.