கண்டியில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட இளைஞர் பேரவையின் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈழவாதிகள் அல்லாத நாடாளுமன்றம் ஒன்றை ஜனாதிபதி கேட்கின்றார். இப்போது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பூரண அமைதி ஏற்பட்டுள்ளது.
எனவே அவரது மொழியில் கூறும் ஈழவாதிகள் இந்நாட்டு சிறுபான்மை இனங்களே.
ஜனாதிபதி வேண்டி நிற்பது தனிப் பெரும்பான்மை இனத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம் ஒன்றையேயாகும். இதற்கான திட்டத்தை வகுத்து சிறுபான்மையினரை முட்டி மோத விட்டுப் பிரித்தாளும் ஓர் ஆட்சியே இன்று நடைபெறுகிறது. இதற்காக வேண்டியே புதுப்புது அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு 116 அமைச்சர்களை வைத்து ஆட்சி நடத்தப்பட இருக்கிறது.
இதன் அடுத்த கட்ட அரங்கேற்றமே சிறுபான்மை இனங்களில் பிரதிநிதித்துவத்தை கூறுபோட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கையில் வைத்துக் கொண்டு தொகுதி வாரிமுறை என்ற போர்வையில் வட கிழக்குக்கு வெளியேயுள்ள சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதாகும்.
இதுபோன்று பல விசித்திரங்கள் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. எனவே ஆபத்தான நாடாளுமன்றத்தில் அவதானமாக நடந்துகொள்ளக் கூடியவர்களையே நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்” என்றார்