Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையிலும் லிபியாவின் நிலை ஏற்படலாம் : சரத் பொன்சேகா

இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவரான இலங்கையின் முன்னை நாள் இராணுவத் தளபதியும், முன்னைய தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆத்ரவைப் பெற்றுக்கொண்டவருமான சரத் பொன்சேகா இலங்கையிலும் லிபியாவின் நிலை ஏற்படும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்று அவரைப் பார்வையிடுவதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவிடமே அவர் மேற்படி எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோதப் போக்குகள் காரணமாக நாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் மட்டுமன்றி வாழ்வதற்கான சுதந்திரமான சூழலும் பறிபோய் விட்டது.
அதன் காரணமாக மிக விரைவில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ந்தெழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதைச்சுட்டிக்காட்டியுள்ள சரத் பொன்சேகா, மக்கள் அப்படிக் கிளர்ந்தெழுவதைத் தடுக்கவோ அல்லது கிளர்ந்தெழும் மக்களை அடக்கவோ யாராலும் முடியாமலும் போகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version