Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையிலும் ஜனநாயகம் நிலவுவதாகக் காட்ட முற்படும் மகிந்த ஆணைக்குழு

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை நேற்றைய தினம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ஊடக ஒடுக்குமுறை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகங்கள் மீதும் நடத்தப்படும் தாக்கதல்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியன உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமை அம்சங்களாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயக கொள்கைகளை நிலைநாட்ட வேண்டுமாயின் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நிகழ்த்திய மகிந்த ராஜபக்ச அரசு நியமித்த குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகம் இன்னும் வாழ்வதாகக் கூறிக்கொள்வதற்காக இவ்வாறான சில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. தவிர, இனப்படுகொலை மற்றும் திட்டமிட்ட தாக்குதல்கள் என்பன அனைத்தும் இராணுவத்தின் தனி நபர் சார்ந்த தவறுகளாகவே சித்தரிக்கப்படுகின்றன.

Exit mobile version