ஐரோப்பிய நாடுகளில் கலாச்சார அகதிகளாக முகமிழந்த இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்கள் படகு அரசியல் அகதிகளைச் ‘சட்டவிரோதப் பயணிகள்’ என அழைக்கின்றனர்.
களுத்துறை மாவட்டம் வேருவளைப் பிரதேசத்திலுள்ள கடலோர கிராமமொன்றில் தங்கியிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என காவல் துறை கூறுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 60 பேர் ஆண்கள் . 9 பேர் பெண்கள் மற்றும் ஆறு பேர் சிறுவர்கள் என்று காவல் துறை ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகன தெரிவிக்கின்றார்.
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் கடற்புலி உறுப்பினரொருவரும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அழிவுகளிலிருந்து தப்பியோடும் அகதிகளை இராணுவக் கட்டுப்பாட்டு எல்லைகளுக்குள் இருந்து வெளியேற்றவும், கடற்பாதுகாப்பிற்கு ஊடாக வெளியேற்றவும் இலங்கை அரசின் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பெரும் தொகையான பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இவர்களை அழைத்து வருவதற்கு பயன்படுத்தப்பட்ட பஸ் வண்டி உட்பட இரு வாகனங்களும் காவல் துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் காவல் துறை விசாரனையின் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.