Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த ரஷ்யாவுக்கு நன்றி:ஜாதிக ஹெல உறுமய நினைவு சின்னம் பரிசு!

இலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தது மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்காக குரல் கொடுத்தும் வரும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய நினைவுச் சின்னமொன்றை வழங்கியுள்ளது.

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்குச் சென்ற ஹெல உறுமய பிக்குமார் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் அந்த நினைவுச் சின்னத்தை கையளித்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு உதவியமைக்காக ரஷ்யாவுக்கு பிக்குமார் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான பிக்குமார் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்

Exit mobile version