Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் போர்க்குற்றங்கள் : ஐ.நாவிடம் மிண்டும் கோரும் மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கண்காணிப்பகம் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஐ.நா.செயலாளரும் மனித உரிமைகள் பேரவையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நூற்றாண்டில் தெற்காசியாவில் இடம்பெற்ற மிகப்பெரும் இன அழிப்பிற்கு எதிராக அமரிக்க அரசிடம் நிதி பெற்றுக்கொள்ளும் மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் அறிக்கைகள் மட்டுமே வெளியிடுகின்றன. இவ்வாறான அறிக்கைகளைக் காரணமாக முன்வைத்து அமரிக்காவும் அதன் நேச அணிகளும் இலங்கை அரசோடு பேரம் பேசிக் கொள்கின்றன.
மறுபுறத்தில் மக்களுக்கு போலியான நம்பிக்கைகளை வழங்கி அவர்களின் எழுச்சிகளைத் தடுக்கின்றன. லிபியாவில் 65 அமரிக்க சார்பு தன்னார்வ, மனித உரிமை நிறுவனங்கள் அறிக்க சமர்ப்பித்த மூன்றாவது நாள் லிபியாவில் மனித் உரிமை மீறப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் லிபியா ஆக்கிரமிக்கப்பட்டது. ஆபிரிக்க நாடுகளில் இனக்குழுக்கள் அழிக்கப்படுகின்றன. இந்த இனக்குழுக்களின் அமைதிகாக்கும் பணிக்கு வன்னி யுத்ததைத் தலைமைவகித்த இனக்கொலையாளி சவேந்திர சில்வா ஆலோசகராக நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version