Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் பொருளாதாரம் காத்திரமாக இருக்கிறது?!

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைவிட இலங்கையின் பொருளாதாரம் உயர் நிலையிலுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தெருவோரங்களில் அனாதரவாக விடப்படுள்ள நிலையில், கிழக்கில் இடம் பெயர்ந்த மக்கள் மூன்று வருடங்களின் மேலாக முகாம்களில் அடிப்படை வசதிகளி எதுவுமின்றித் தங்கவைக்கப்படுள்ள அவலத்தின் மத்தியில், மீள் குடியேறிய யாழ் முஸ்லீம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட சூழலில் ஜயசுந்தர இலங்கைப் பொருளாதாரம் குறித்துப் பெருமைகொள்கிறார்.

தவிரவும், ஜப்பான் சுனாமி அனர்த்தம் காரணமாகவோ, மத்திய கிழக்கு போராட்டங்களினாலோ இலங்கைப் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version