இலங்கையின் போர்க்குற்றங்கள் அமரிக்காவில் பேசப்படும்?
இனியொரு...
தமிழீழ விடுதலைப் புலிகளக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பான அறிக்கையொன்று அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் வாரமளவில் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்படவுள்ளதாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் ரொட் தெரிவித்துள்ளார். இலங்கை நிலைமை குறித்து ஏற்கனவே அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றை முன்வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக, சர்வதேச விவகாரச் செயலாளரும், ராஜாங்கச் செயலாளரும் இலங்கைத் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னர், ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயங்கள் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.