Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் பிரச்சனை பயங்கரவாதமே – கிருஸ்ணா, தமிழ் மக்களுக்குத் தீர்வு தேவையில்லை – கோதாபய

மூன்று தசாப்தங்களாக இலங்கையின் அடிப்படைப் பிரச்சனை பயங்கரவாதமே என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையின் இன்றைய பிரச்சனை யுத்தாதல் பாதிப்படைந்து இடம்பெயர்ந்தவர்கள் குறித்ததே எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை கே.பி இந்திய ஊடகம் ஒன்றிற்கான நேர்காணலிலும் இவ்வாறே தெரிவித்துள்ளார்.இதே வேளை இலங்கை அரசைப் பொறுத்த வரைக்கும் இனிமேல் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பன குறித்துப் பேசிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் நாங்கள் பயங்கரவாதத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிறுவிவிட்டோம் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹெட்லைன்ஸ் ருடே என்ற தொலைக் காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோதாபயவின் கூற்றுக்கள் தமிழ் மக்களைப் போராடக் கோருகிறது. இந்திய இலங்கை அரசுகள் ஒரே குரலில் பேசுகின்றன. இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த அரச ஆதரவாளர்களும் இதே கருத்துக்களையே முன்வைக்கின்றனர்.

Exit mobile version