Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் தொழிற்சங்கவாதி பாலா தம்பு காலமானார்

bala_thampoeஇலங்கையில் இடதுசாரிகளின் மக்கள் போராட்டங்களுக்கும் தொழிலாளர் எழுச்சிக்கும் நீண்ட வரலாறுண்டு. சண்முகதாசன் தலைமையிலான மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியே முதல் முதலாக ஆயுதம் தாங்கிய மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கிற்று. அவ்வேளையில் இனவாதத்தை முன்வைத்து வாக்குப் பொறுக்கிய தமிழரசுக் கட்சி ஆயுத எழுச்சியை அடக்குமாறு பேரினவாத அரசைக் கோரியது. இதன் மறுபக்கத்தில் பாலா தம்பு ரொஸ்கியவாதியாகத் திகழ்ந்தார். லங்கா சமசமாஜக் கட்சியில் மாணவனாக இணைந்த பாலா தம்பு, பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1947 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச சேவைத் துறையினரின் வேலை நிறுத்ததின் போது வேலைக்குச் செல்லாதவர்கள் பதவியிழப்பார்கள் என அரசு அறிவித்தது. அவ்வேளையில் வேலையை இழந்த பாலா தம்பு இலங்கையின் முக்கிய தொழிற்சங்களில் ஒன்றான சி,எம்யூ இன் தலைவரானார்.

1963 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அவசரகாலச் சட்டத்திற்கும் மதிப்பளிக்காமல் இலங்கை முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்ததிற்கு பாலா தம்பு தலைமை தாங்கினார்.

லங்கா சமசமாஜக் கட்சி 1964 ஆம் ஆண்டு இலங்கை அரசுடன் இணைந்த போது அதனை எதிர்த்துக் கட்சியிலிருந்து வெளியேறினார்.

வாழ்நாள் முழுவதும் தொழிற்சங்கத்திற்காகவும் போராட்டங்களுக்காகவும் அர்ப்பணித்த பாலா தம்பு 01.09.2014 அன்று தனது 92 வது வயதில் காலமானார்.

Exit mobile version