Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் தந்திரோபாயத்தை வேறு இடங்களில் இடம்பெறும் கிளர்ச்சிகளுக்கெதிராக பயன்படுத்த முடியுமா?: ஜெரனிபேஜ்

இலங்கையின் தந்திரோபாயத்தை வேறு இடங்களில் இடம்பெறும் கிளர்ச்சிகளுக்கெதிராக பயன்படுத்த முடியுமா? சில சமயங்களில் அவர்களால் முடியுமா? என்பது மிகவும் முக்கியமானதாகும் என்ற கேள்விக்கு பல சமாந்தரமான விடயங்கள் உள்ளன என்று லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜெரனிபேஜ் தமது செய்தி ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; கிளர்ச்சிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்று நீண்டகாலமாக இருந்துவந்த கோட்பாடானது பொருத்தமற்றதொன்று என்ற தன்மை இலங்கை தொடர்பாக காணப்படுவது, அதுதொடர்பான வாதத்திற்கு சாதகமானதாக உள்ளது. அரசியல் ரீதியான எதிர்ப்பையும் ஊடகங்களின் கண்காணிப்பையும் தடுப்பதிலும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக குறைந்தளவில் கவனம் செலுத்தியதிலும் வெற்றிக்கான சூத்திரத்தை இலங்கை கொண்டிருந்ததாகத் தென்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையை முடக்குவதற்கு வேண்டிய போதியளவிலான சர்வதேச ஆதரவை இலங்கை திரட்டிக்கொண்டது. அத்துடன் கடந்த புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனக்கு சாதகமான முறையில் வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

தனது தலையீட்டிற்கான சுவையை மேற்குலகு இழந்திருப்பதுடன் மனிதாபிமான அடிப்படையில் ஏனையோரை தடுப்பதற்குமான தார்மீக அடிப்படையிலான அதிகாரத்தையும் மேற்குலகு இழந்துள்ளது.

“நியாயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை’ என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை பேரவையின் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் எதிர்ப்பு சரியானதாகத் தோன்றுகிறது. ஏனெனில் ஏனைய பல நாடுகள் கிளர்ச்சிகளை எதிர்நோக்கியுள்ளன. அந்த விடயம் கவனத்திற்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தில் நீண்ட விவாதத்தை சில நாடுகள் முன்வைத்திருந்தன. குறிப்பாக ரஷ்யாவைக் கூறமுடியும். செச்னியாவிலுள்ள பிரிவினைவாதப் போராளிகளை தோற்கடிப்பதற்கு ரஷ்யாவும் இதேமாதிரியான வழிமுறைகளையே பயன்படுத்தியது. சீனாவும் திபெத், சிங்யாங் பகுதிகளில் பிரிவினைவாதிகளைக் கையாள தனது உரிமைகளைப் பாதுகாத்துவருகிறது. ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு மேற்கொள்ளப்படும் அநேகமான முயற்சிகளுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

தங்களுக்குப் பொருத்தமான முறையில் சர்வதேச சட்டத்தை மேற்கு நாடுகள் உயர்த்திப் பிடிப்பதாகவும் தமது நலன்களுக்கு தேவைப்படாவிடின் அவற்றைப் புறக்கணிப்பதாகவும் அதற்கு உதாரணமாக ஈராக்கையும் இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பாகிஸ்தான் சுவாட் பகுதியில் ஆட்லறி மற்றும் யுத்த ஹெலிகொப்டர்களை அமெரிக்காவின் ஆதரவுடன் பயன்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆயினும் இலங்கையின் அணுகுமுறையிலுள்ள பல விடயங்கள் அதன் நீண்டகால பெறுபேறுகள் தொடர்பாக சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றன. இலங்கை மேற்கொண்ட அணுகுமுறையானது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான விதத்தில் பயனுள்ள விளைவுகளை தோற்றுவிக்குமா? என்ற சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

வெற்றியை ஈட்டிக்கொள்ள அரசியல் ரீதியான அடக்குமுறை தேவைப்பட்டது. 2006 இற்குப் பின்னர் குறைந்தது 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கடுமையான முறையில் செலுத்தப்பட விலை என்று ஜேன்”ஸ்’ டெரரிசம் அன்ட் இன்சேஜன்சி சென்டரின் ஆசிரியர் வில்காட்லி கூறியுள்ளார். அதிலே இலங்கையிடமிருந்து பாடங்களானவை பிரயோகிப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றை அமுல்படுத்த நீங்கள் குறிப்பிட்ட விதத்திலான அரசாங்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அடுத்த விவகாரம் 2 இலட்சத்து 70 ஆயிரம் தமிழ் அகதிகளை வைத்திருக்க அரசாங்கம் முகாம்களைப் பயன்படுத்தும் விடயம் உள்ளது. அவர்களின் மத்தியில் புலிகள் இருப்பதாக கூறியுள்ளது. மூன்றாவது விடயமாக இருப்பது பொதுமக்கள் இழப்புகளாகும். ஜனவரிக்குப் பின் அதிகளவில் பொதுமக்கள் இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஒப்பீட்டளவில் 2008 இல் ஆப்கானிஸ்தானில் 2,118 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2007 இல் 1,523 பேர் பலியாகியிருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

20062008 காலப்பகுதியில் ஈராக்கில் 10,356 பொதுமக்கள் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பு உபாயமானது மரபுரீதியான ரோமானிய முறைமையை சிறியளவில் கொண்டிருப்பதாகத் தென்படுகிறது.

வடமேற்குப் பாகிஸ்தானில் எழுந்தமானமான குண்டு வீச்சுகள் மற்றும் பொதுமக்கள் இழப்புகள், அங்கு வசிப்போரை சிறையில் அடைத்தல் என்பனவற்றின் மூலம் அங்குள்ளவர்கள் தலிபான் அல்லது அல்ஹைடா உறுப்பினர்கள் அல்ல என்று நிரூபிக்கப்படும் வரை இந்த விடயங்கள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கடும்போக்கு அதிகாரிகள் இவை குறித்து மகிழ்ச்சியாகக் கூறக்கூடும். ஆனால், தனது பிரஜைகளை இந்த மாதிரியாக நடத்துவதை பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நியாயப்படுத்த முடியாது. விசனமானது மேலெழுந்து வரும் போது அதன் பிரதிபலிப்புகள் வெளிப்படுமென்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். இலங்கையின் அணுகுமுறையானது மரபுரீதியான யுத்தத்தில் வெற்றியை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஆனால் மற்றொரு மோதலுக்கான விதைகளை விதைத்திருப்பதாகவும் பலர் எதிர்வு கூறுகின்றனர். ?வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியும். ஆனால், பிரச்சினையை அதன் மூலம் முடிவுக்குக் கொண்டுவர இயலாது என்று இலங்கையில் 1980 களில் இந்திய சமாதானப் படையின் தளபதியாகவிருந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறியுள்ளார். ?அது அரசியல் ரீதியானதாக இருக்க வேண்டும் முதல்கட்டத்தில் நீங்கள் செய்திருப்பது பிரச்சினையை பெரிதுபடுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version