
இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா, அக்னி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தியா நீண்டகால உள்நாட்டு ஏவுகணை அபிவிருத்தித் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், தற்காப்பு நோக்கத்தைக் கொண்டதேயன்றி, எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல.
முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் வெளியிடப்பட்டதாக ஊகிக்கப்படும் இந்தச் செய்திகளால், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவும், சிறிலங்காவும் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளைப் பாதிக்கப்படாது“ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்ளேயே அப்பாவி மக்களையா இந்த ஏவுகணைகள் குறிவைத்துள்ளன? உலகில் தனது சொந்த நாட்டு மக்களையே அழிக்கும் நாடுகளில் இலங்கையும் இந்தியாவும் உலகப் புகழ் பெற்றுள்ளன. இந்த நிலையில் இலங்கையை மிரட்டுவதற்கும் ஆக்கிரமிப்பதற்கும் இன்னொரு முள்ளிவாய்க்காலைத் தலைமை தாங்குவதற்கும் இந்தியாவிற்கு அதிக ஏவுகணைகளா தேவை. இலங்கையின் கொல்லைப்புறத்தில் கூடங்குளம் அணு மின்நிலையம் என்ற அணுகுண்டைத் தயாரித்து வரும் இந்தியாவிற்கும் அதனை ஆதரிக்கும் ஈழத் தாய் ஜயலலிதாவிற்கும் ஏவுகணைகள் ஒன்றும் பெரிதல்ல.