Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் உண்மை நிலை : கோர்டன் வைஸ்

இறுதிக்கட்ட அழிவுகளில் நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என போர்கள்தொடர்பான விரிவான ஆய்வறிவுள்ள ஒருவரூடாகத் தமக்குத் தெரிய வந்ததாக கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். தமது 14 வருட சேவையின் பின்னர் ஐ.நா விலிருந்து பதவி விலகிய இலங்கைக்கான ஐ.நா வின் பேச்சாளரான இவர் ஏபிசி செய்திகளுக்குத் தெரிவித்தார். பதவி விலகிய இவர் இப்போது வெளிப்படையாகப் பேசவல்ல நிலையிலுள்ளதாக அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.
யுத்தம் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் ஊடாகவோ அல்லது விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஊடாகவோ தமக்குக் கிடைக்கப் பெறவில்லை எனவும், யுத்த களத்தில் இருந்த நம்பகத் தகுந்த வட்டாரங்ங்கள் தமக்கு இந்தத் தகவல்களை வங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று இலட்சம் பொதுமக்கள் நியூ யோர்க்கின் மத்திய பூங்கா போன்ற ஒரு சிறு நிலப்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து ரக ஆயுதங்களும் பாவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.
புலிகளும் தப்பிச் செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிகிறார்.
படகில் அகதிகளாகச் செல்பவர்களை ராஜபக்ச கிரிமினல்கள், ஆயுத வியாபாரிகள், போதைவஸ்துக் கடத்தல்காரர்கள் என்று சொல்கிறார். தமிழர்கள் மிகுந்த ஆபத்திற்கு நடுவில் இலங்கையை விட்டு வெளியேறும் சம்பங்கள் இலங்கையின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுகிறது.

Exit mobile version