Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் இலவச மருத்துவ சேவையையும் கட்டண சேவையாக மாற்றும் மகிந்த அரசு

தெற்காசிய நாடுகளில் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படும் மிகச்சில நாடுகளில் இலங்கையும் ஒன்று. இச்சேவை ராஜபக்ச அரசாங்கத்தால் கட்டணச் சேவையாக்கபடுகின்றது. மிக நீண்ட காலமாகவே இலங்கையின் இலவச மருத்துவம் குறித்த் ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் விசனம் தெரிவித்து வந்துள்ளன.

இந்த நிலையில், காப்புறுதித் திட்டம் மூலமாக நோயாளர்களுக்கு மருத்துவம் செய்யும் வழிமுறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இக் காப்புறுதியைப் பெற்றுக் கொள்வதற்காக பணம் ஒரு தொகை செலுத்த வேண்டும். காப்புறுதியொன்றைப் பெற்றுக் கொண்ட ஒருவர் நோயாளியாகுமிடத்து அவர் அரச வைத்தியசாலையொன்றில் மருத்துவம் செய்துகொள்ள நேரிடின், இக் காப்புறுதித் திட்டம் மூலம் பணம் செலுத்தப்படும்.

வெவ்வேறு பெறுமதியில் அறிமுகப்படுத்தப்படும் இக் காப்புறுதித் திட்டம் மூலம் நோயாளிகளுக்கு அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள காப்புறுதித் திட்டத்திற்கேற்பவே மருத்துவம் செய்யப்படும்.

அரசாங்கம் மூலமாக அமுல்படுத்தத் திட்டமிட்டிருக்கும் இக் காப்புறுதித் திட்டமானது ‘மக்கள் சுகாதாரக் காப்புறுதித் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Exit mobile version