
பாசிஸ்ட்டிடமிடுந்து மக்களின் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படவில்லை. மாறாக இலங்கையின் உறுதியான ஏகபோக அரசுகளின் அடியாட்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதே தனது பிரதான கடமை என அறிவித்த இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மீண்டும் தான் ஜனாதிபதியாகப் போட்டியிட மாட்டேன் என்றார்.
ராஜபக்ச குடும்ப சர்வாதிகார ஆட்சியின் போது விலக்கி வைக்கப்பட்டிருந்த கொழும்பு உயர்குடிகள் மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்தன. கொலைகளை நடத்துவதற்காக கொழும்பு தயாரிக்கப்பட்டு தெருவில் இறக்கப்பட்ட ராஜபக்சவிற்குப் பதிலாக இலங்கையை இன்னொரு வகையில் சுரண்டிக்கொழுத்த கொழும்பு மேட்டுக்குடிகள் இழந்த ஆட்சியை மீட்டுள்ளன.
ராஜபக்சவின் தேர்தல் திட்டங்கள் முழுவதையும் அன்னிய நாடுகளின் ஆதரவோடு இறுதிக் கட்டம்வரை தகர்த்தெறிந்த கொழும்பு உயர்குடிகளின் அரசியல் கலாச்சாரமே மைத்திரிபால குறிப்பிடும் இலங்கையின் புதிய அரசியல் கலாச்சாரம்.
இந்த அரசியல் கலாச்சாரம் சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்கவும், அப்பாவிச் சிங்கள மக்களைச் சுரண்டவும் தன்னைத் தகவமைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது
